நடிகர் அல்லு அர்ஜுன் இன்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி வெளியாகியுள்ளது.
அதற்கு முதல் நாள் இரவில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரடியாக ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நிலையில், அவரை காண கூட்டம் முண்டியடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி எனும் பெண் பரிதாபமாக பலியானார். அவரது குழந்தையும் மூர்ச்சையடைந்து சிகிச்சை பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரேவதியின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தியேட்டருக்கு வந்ததும் போதிய பொலிஸார் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பதுமாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டமாய் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் சிக்காட்பள்ளி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கூடியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.