டோக் குரங்குகளுக்கு இலங்கை சட்டத்தின் பாதுகாப்பு தேவை! ஜகத் குணவர்தன வேண்டுகோள்..!

tubetamil
0

 இலங்கையின் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத பாலூட்டிகளில் டோக் எனப்படும் குரங்குகள் உள்ளடங்குவதாக மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் ஜகத் குணவர்தன  தெரிவித்துள்ளார்.


எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குள் அத்துமீறி நுழையும் பாதுகாக்கப்படாத விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



குரங்குகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.


எனினும் குணவர்தன இந்தக் கூற்றுக்களை நிராகரித்தார், யானைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட இனங்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவது தொடர்பிலேயே சூழலியலாளர்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர்; சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த விடயத்தில் உண்மையான பிரச்சனையில் இருந்து, கவனத்தை திசை திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயமான முறையே கையாளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top