பெரஹெர மாவத்தையில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் விபத்து..!

tubetamil
0

 கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் இயங்கும் உணவகம் ஒன்றில் நேற்று (13) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு-02, பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிலேயே குறித்த தீப்பரவல் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top