இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா-ரித்திகா தம்பதிக்கு கடந்த நவம்பர் 15ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு ஏற்கனவே சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளனர்.
து தொடர்பாக ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு குடும்ப பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தங்கள் மகனுக்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அஹான் என்றால் ‘விடியல்’ அல்லது ‘ஆரம்பம்’ என்று பொருள்படும். ‘அஹான்’ என்ற பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான, நம்பிக்கை மற்றும் நட்புடன் இருப்பார்கள் என்றும், தம் வசீகரத்தால் பிறரைக் கவரும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், நட்பிற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.