சிரியாவில் உள்ள இந்திய குடிமக்களை விரைவாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சிரியாவில் தற்போதிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் (Homs) கிளா்ச்சிப் படையினா் நெருங்கியுள்ளதையடுத்து அந்த நகரமும் அவா்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி வருகிறார்கள்.
தற்போது சிரியாவில் இருக்கும் இந்தியர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுவதோடு +963 993385973 என்ற வட்ஸ்ஆப் எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.