தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், அந்த நட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மெங்கும் தெரிய வருவதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இராணுவச் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தி, பின்னர் அதனை விலக்கிக்கொண்ட நிலையிலேயே அவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பை கோரியுள்ளார்.
அவர் ஆற்றிய இரண்டு நிமிட உரை ஒன்றிலேயே குறித்த மன்னிப்பை கோரியிருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனம், பொறுப்பான கட்சி என்ற எனது விரக்தியிலிருந்து உருவானது என தெரிவித்துள்ளார்.
எனினும், தென்கொரிய குடிமக்களுக்கு, தமது நடவடிக்கை, கவலை மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும்
இந்தநிலையில், தமது செயலால், பெரும் அதிர்ச்சிக்குள்ளான, குடிமக்களுக்காக வருந்துகிறேன் மற்றும் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும், இந்த வார இறுதியில் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில், குற்றப்பிரேரணை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் எநாவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்காமையை அடுத்தே, தென்கொரிய ஜனாதிபதி, நாட்டில் இராணுவ சட்டத்தை நடைமுறைபடுத்தியமை குறிப்பிடத்தக்கது