நாட்டில் உப்பு பற்றாக்குறை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறு, ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி.நந்தனதிலக்க பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய உப்பு விநியோகம் நாட்டின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு சராசரி குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு 400 கிராம் சிறிய பொதிகள் மற்றும் ஒரு கிலோகிராம் படிக உப்பு போதுமானது என வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பற்றாக்குறை வதந்திகளை நம்பி தேவையற்ற முறையில் உப்பை சேமித்து வைப்பது தேவையற்றது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை போதுமான அளவுக்கு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தில் தற்போது 6,000 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு பற்றாக்குறையையும் தடுக்க 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண உப்பளங்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.