உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து பெருமை சேர்த்து கொடுத்த 18 வயதே ஆன குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கியுள்ளது.
இதில் பிரதமர் முதல் சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் குகேஷை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, யோகியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை குகேஷ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்