இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக - ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர்

tubetamil
0

 இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.



கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலை. நாங்கள் எதிர்காலம் தொடர்பில் திட்டமிடல்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறான திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை உண்டு பண்ணலாம்.


சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். 


வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கல்விக்கும், சுகாதாரத்துக்கும் பாதீட்டில் அதிக நிதி ஒதுப்பப்பவுள்ளது.


கிடைக்கவுள்ள பாரிய நிதி மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top