பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பனை தென்னை வள கூட்டுறவுத்தலைவர்கள் சமாசம், கொத்தணி தலைவர்கள் இன்றைய தினம் பனை அபிவிருத்தி தலைவரை சந்தித்துள்ளதுடன் அவருக்கு எதிராக கண்டனமும் எழுப்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பனை அபிவிருத்தியில் பாதகம் ஏற்படுத்தும் விடயங்களையும் திக்கம் வடிசாலை சார்ந்த விடயங்களை முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பாகவே அவர்கள் னை அபிவிருத்தி தலைவரை சந்தித்துள்ளனர்.
அது தொடர்பான நடவடிக்கைகளையும் அவ்வாறான நடவடிக்கைகளை இனி மேற்கொள்ளாதிருக்கவும் பனை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் ஆதரவு தெரிவித்து தமது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதே வேளை சட்ட விரோதமான முறையில் பண்டத்தரிப்பு பனை தென்னை வள கூட்டுறவு சங்கத்தின் பெயரில் பண்டத்தரிப்பு கூட்டுறவு சங்கத்தின் எல்லைக்குள் மாதகல் பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கம் என்ற போலிப் பெயரில் கல்லை அடைத்தது ஏற்றுமதி செய்த ஏற்றுமதியாளருக்கு எதிராகவும் தலைவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது கற்பகம் விற்பமனை நிலையங்கள் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நாடுகளான ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களின் தரம், விற்பனை என்பன உறுதிப்படுத்தப்படவுள்ளது. பனஞ்சாராயம், பணம் கள் போன்ற பொருட்களும் அந்த கற்பகம் விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்படவுள்ளது.
அது தொடர்பான கேள்விப்பத்திரங்கள், கோரிக்கைகள் கோரப்படவுள்ளன. இதன் முதலாவது பணிப்பாளர் சபை கூட்டத்தில் இதற்கான உத்தியோக பூர்வமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளது எனவும் இதன்போது பனை அபிவிருத்தி சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.