இலங்கையின் பாரம்பரிய பனை பொருட்களின் சர்வதேச சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தும் நோக்கில், கம்போடியாவில் வசிக்கும் ஒருவர் தனது சமீபத்திய வருகையின் போது பல்வேறு பனை சார் உட்பத்திபொருட்களின் மாதிரிகளை இங்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் எங்களினுடைய பொருட்களை எவ்வாறு சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் ஊக்கப்படுத்தியுள்ளார்.
கம்போடியாவில் வசிக்கும் தமிழ் ஆர்வலரான செல்வகுமார் ரவிராஜ், என்பவரே இவ்வாறு தெரிவித்திட்டுள்ளார்.
செல்வகுமார் ரவிராஜின் இந்த முயற்சி, இலங்கையின் பனை பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.