அல் இத்திஹாத் அணிக்கு எதிரான கால்பந்தாட்ட போட்டியில் அல் நஸர் அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
இந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் இத்திஹாத் அணிகள் மோதின.
இதன்போது அல் இத்திஹாத் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா 55வது நிமிடத்தில் கோல் அடித்தா நிலையில் அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பதிலடி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கோல் அடிக்க இரு அணி வீரர்களின் முயற்சிகளும் 90 நிமிடங்கள் வரை முறியடிக்கப்பட்டன.
ஆனால், கூடுதல் நிமிடத்தில் (90+1) ஸ்டீவன் பெர்ஃவிஜன் அடித்த மிரட்டலான கோல், அல் இத்திஹாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் அல் இத்திஹாத் (Al Ittihad) அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணியை வீழ்த்தியது.
தோல்வி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, "வலுவாக மீண்டும் திரும்பி வருவோம்" என குறிப்பிட்டார்.