ரிதியகம சஃபாரி பூங்காவில் இணைந்த 6 புதிய சிங்கக்குட்டிகள்!

tubetamil
0

 ஹம்பாந்தோட்டை ரிதியகம  சஃபாரி பூங்காவில் 6 சிங்கக்குட்டிகல் தற்போது இணைந்துள்ளதாக  பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டோரா  என்ற சிங்கம்  லாரா என்ற குட்டியை ஈன்றுள்ளது.


இருப்பினும், லாரா சிங்கம் டோராவுக்குப் பாலூட்ட மறுத்த நிலையில், பூங்கா ஊழியர்கள் டோராவுக்கு செயற்கையாகப் பாலூட்டி அதனை பராமறித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் லாரா ​​மற்றும் அதன் குட்டியான டோரா  6 குட்டிகளை ஈன்றுள்ளன.


ஆனால் டோரா, லாராவைப் போல தனது குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்காமல் குட்டிகளை பாதுகாக்கின்றமை சிறப்பம்சமாகும்.


தற்போது, ​​இந்த 6 சிங்கக் குட்டிகளும் சஃபாரி பூங்காவில் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை பொதுக் கண்காட்சிக்காக தனிப் பகுதியில் வெளியிடப்படும் என்றும் சஃபாரி பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top