ஹபரணை - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்து - சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பலி ..!

tubetamil
0

 ஹபரணை - திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்றிரவு (26) நடைபெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். 



 இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

 

கந்தளாய்  பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் அதிகாரியான இவர், கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று, லொறி மற்றும் கார் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். 


இதன் பின்னர் உடனடியாக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


இந்த விபத்தில் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் நான்கு மாத கைக்குழந்தை, மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் படுகாயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக, டிப்பர் வாகனத்தை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அத்துடன் பொலிஸ் துறையினர் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top