முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை பகுதியில் கால்நடை மேய்க்கச் சென்ற வயோதிபர் ஒருவர், கசிப்பு உற்பத்தி செய்யும் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 73 வயதான வற்றாப்பளையைச் சேர்ந்த வயோதிபரே தனது கால்நடைகளை மேய்க்க புதறிகுடா பகுதிக்கு சென்றபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவறால் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டார்.
தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் கால்நடைகளுக்கு மேய்ச்சல்தரை பற்றாக்குறை நிலவுவதால், பலர் தங்கள் கால்நடைகளை புதறிகுடா பகுதியில் மேய்க்கின்றனர். இந்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அப்பகுதிக்கு செல்பவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.