இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனடித்து 92 ஆவது வயதில் நேற்று (26) இரவு காலமாகியுள்ளார்.
தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் னால குறைவுஇ காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த இதேவேளை அவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை(டிச.28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுமை தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார்.
தில்லியில் உள்ள தனது வீட்டில் அவர் சுயநினைவை இழந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இரவு 8.06 மணியளவில் கொண்டுவரப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், இரவு 9.15 மணிக்கு உயிர் பிரிந்ததாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் அறிந்ததும், அவரைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.