அட்லீயின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்றான தெறி படம் தற்போது பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது.
இப்படத்தை அட்லீ தயாரிக்க, காலிஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
விஜய் ஏற்று நடித்திருந்த ஹீரோ கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க, கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேபி ஜான் படம் வெளிவந்து இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கடந்த இரண்டு நாட்களில் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்றும், இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.