களுத்துறை சுற்றுலா ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் கொண்ட குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.
பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் உயர் நிர்வாக அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்போது இளைஞர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.