நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்ட கல்லூரி பரீட்சை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
நாமல் பரீட்சை எழுதும் போது சட்டக்கல்லூரியில் கடமையாற்றிய பொறுப்பானவர் உயிரிழந்தமையினாலேயே குறித்த விடயம் தொடர்பில் தீர்வு எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தன்மீதான குறற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என நாமல் பகிரங்கமாக தெரிவித்தார் என அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் வசந்த, நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி பரீட்சையில் தோற்றிய விதத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது தனியான அறையொன்றில் இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் பரீட்சை எழுதியதாக குற்றம் சாட்டியிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.