இலங்கை பெண்களுக்கு எச்சரிக்கை...

tubetamil
0

 கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு, சருமத்தை பளபளபாக்கும் கிரீம்கள், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், சவர்க்காரம், முடி சாயம் உள்ளிட்டவை குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுகளின் போது, ​​இறக்குமதியாளரின் பெயர் குறிப்பிடப்படாத தரம் குறைந்த அழகுசாதனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இறக்குமதியாளர்களின் பெயர் குறிப்பிடாமல் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை எச்சரிக்கும் பணியில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், புதுக்கடை நீதிமன்றில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நுகர்வோர் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.


இவ்வாறான பொருட்களில் ஆபத்தான உலோகங்கள் உள்ளடக்கப்படலாம் எனவும், இதனால் சருமத்திற்கு மிகவும் பாதகமான நிலைமைகள் ஏற்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top