கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் லயன் கிங்.
விலங்குகளை மையப்படுத்திய படங்கள் என்றாலும் அந்த படங்களை கொண்டாட எப்போதும் தவறியதில்லை. அப்படியான ஒரு படம் தான் லயன் கிங்.
இந்த லைன் கிங் படம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலையும் பெற்றுள்ளது.
இந்த படத்தின் அடுத்த பாகமாக முதல் பாகத்தில் வில்லனாக இருந்த முஃபாசா பற்றிய கதையை படக்குழு படமாக்கி உள்ளது.
இந்த படத்தை இந்தியாவில் வெளியிட இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படத்தை டப் செய்து படக்குழு வெளியிடுகிறது.
முபாஸா பற்றிய படம் வரும் 20ஆம் திகதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் டப்பிங்கில் யார் யார் பணியாற்றினார்கள் என்ற அறிவிப்பை டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது தெலுங்கு வெர்ஷனுக்கு யார் யார் டப்பிங் கொடுத்துள்ளார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். படத்தில் வரும் டாக்கா கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளார்.தி லயன் கிங் படம் மாபெரும் வெற்றி படமாக மாறியது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி முஃபாசா தி லயன் கிங் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது.தி லைன் கிங் படத்தில் குரல் கொடுத்திருந்த ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி இந்தப் படத்திலும் குரல் கொடுத்துள்ளனர். இவர்கள் பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். கிரேஸ் கதாபாத்திரத்திற்கு நாசரும் ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு விடிவி கணேஷும் குரல் கொடுத்துள்ளனர்.
குறித்த இதே வேளை 'முஃபாசா: தி லயன் கிங்' படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில் மகேஷ் பாபு புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மகேஷ் பாபு முஃபாஸா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார். டிஸ்னியின் முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.