யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு (Ramanathan Arjuna) யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகுந்த முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (13) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன.
நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும் அவர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர். நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதை விடுத்து எம்மை பயமுறுத்தி அல்லது உத்தியோகத்தர்களை பயமுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்குள்ள உயர் அதிகாரிகளை என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்பது தவறான விடயம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்ற போது ஒரு சிலர் பல உத்தியோகத்தர்களுக்க கோபம் ஏற்படுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுவாராக இருந்தால் அவர்களை இனிவரும் கூட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.