சொகுசு கப்பலுக்கு ஓனரான நடிகை ஆல்யா மானசா!

tubetamil
0

 சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை தான் ஆல்யா மானசா. 


இவர்  விஜய் டிவி பக்கம் வந்து ராஜா ராணி தொடர் நடித்தார். முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நிலையில் இவர் அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அதற்கு அயிலா என பெயர் வைத்துள்ளார். .


இந்நிலையில் ராஜா ராணி தொடரில் சித்துவுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு இரணடாவது குழந்தை பிறக்க உள்ளநிலையில் அந்த தொடரிலிந்து விளக்கினார். இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயரை வைத்துள்ளார்.


இதனை தொடர்ந்து சன் டிவியில் இனிய எநும் தொடரில் நடித்தார். இந்த தொடர் சமீபத்தில் தான் முடிந்தது.



சமீபத்தில் இவர்கள் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டினர், அவர்களின் புது வீட்டை கூட சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் Exclusiveஆக காட்டி இருந்தோம்.


கேரள மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் மிகவும் பிரபலம், அங்குள்ள போட் ஹவுஸில் விடுமுறையை கழிக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் வருகிறார்கள்.


போட் ஹவுஸில் தங்க ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறதாம். ஆல்யா மானசா தற்போது சொந்தமாக போட் ஹவுஸ்   ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை ரூ. 2 கோடியாம்.


அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால் என எல்லா வசதிகளும் உள்ளதாம். புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top