கொழும்புத்துறை பகுதியில் வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை யாழ்ப்பாண பொலிசார் இன்று (28) கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது
2024 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 12 ஆம் திகதி கொழும்புத்துறை இரவு வேளையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஒருவரின் வீட்டுக்கு சென்று வாளால் வெட்டி காயப்படுத்திய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் அன்றைய தினம் மூன்று வீடுகளுக்கு சென்று வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்றைய தினம் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.