இலங்கையின் பலுகஸ்வெவ பகுதியில், 10 மாத ஆண் குழந்தை மர்மமாக உயிரிழந்த நிலையில், அதன் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலுகஸ்வெவ பகுதியில், குழந்தை தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. கடந்த இரவு, தந்தை வீட்டின் வெளியே சென்ற போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளில், தாயார் குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழாயில் அமிழ்த்தி, பின்னர் மீண்டும் கட்டிலுக்கு கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாயாரே இக் கொலையை நிகழ்த்தியதாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் , இது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இதேவேளை 34 வயதுடைய தாயாரை கைது செய்து, மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.