இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய காசா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரேல் மந்திரிசபை இன்று அதிகாலை ஒப்புதல் அளித்துள்ளது. இது கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஊக்குவிப்பில் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய காசா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரேல் மந்திரிசபை நேற்று அதிகாலை ஒப்புதல் அளித்துள்ளது. இது கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஊக்குவிப்பில் முடிவுக்கு வந்தது.
இந்த போர், காசாவில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் பல ஆயிரம் பேர் உயிரிழப்பிற்கு வழிவகுத்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களில் அமுல்படுத்தப்படுகிறது.
முதலில், 6 வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வருவதன் மூலம், காசா மீது இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும். ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து 33 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாகவும், 735 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தம், காசா மீதான போரை 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டு செல்லும் வகையில் அமுலாக்கப்படுகிறது.