இன்றைய மாணவர்கள் உணர்ச்சிவசப்படாமல், தந்திரசாலிகளாகவும் சகிப்புத்தன்மை மிக்கவர்களாகவும் மாற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"கோடாரிக்குள் புகுந்த மரப்பிடி போல நாங்கள் எங்களை அளிப்பதற்கும் நாங்களே ஆட்களை வைத்திகிறோம்" என்ற கருத்தை முன்வைத்த சிறீதரன், தற்போது சிலர் தங்களது சாதனைகளைப் பற்றி பெருமையாக பேசினாலும், வைபிள் சொல்லுவதை போலவும் பகவத் கீதை சொல்லுவதை போலவும் அது நிலையானதல்ல என்றும், இலக்குகளை அடைய பல்வேறு இடையூறுகள் எழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்ததுடன் "நான்" என்ற ஆணவம் பிடித்தவர்களை எதிர்கொள்ள, இளைஞர்கள் தந்திரசாலிகளாகவும் சகிப்புத்தன்மை மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.