கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர்.
காலை 8.30மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் நாட்டுக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது .
தொடர்ந்து சனாதிபதி செயலகத்திலிருந்து ஒளி / ஒலி பரப்பப்படும் "Clean Sri Lanka" நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்.