மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான முன்னணி செயலியான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணைய பயனர்களுக்காக தலைகீழ் படத் தேடல் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சமானது வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தை கூகுளில் நேரடியாக பதிவேற்றம் செய்து அதை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.
அனைத்து WhatsApp பயனர்களும்
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம், பயனர்கள் தாங்கள் சந்திக்கும் சந்தேகத்திற்கிடமான புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.
மேலும், இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை மிகவும் திறம்பட வழிநடத்த உதவுகிறது.
WABetaInfo படி, இந்த அம்சம் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.