முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களே போதுமானது என விக்னேஸ்வரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்
இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளால் அவருக்கு ஆபத்து என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனினும், மஹிந்தவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பது தெரியவில்லை.
எது எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு நன்கு பயிற்சி பெற்ற ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களே போதுமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.