வவுனியா சுந்தரபுரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த தீபாவளியன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவர், தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகந்தன் (28) எனப்படும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தீபாவளியன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த இவர், இந்த கொலைச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் அவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.