ஒரு லீற்றர் எரிபொருளுக்காக 162 ரூபா கமிஷன் முன்னாள் அமைச்சரின் சட்டைப் பைக்குள் செல்கிறது என்ற தகவலின் உண்மைத்தன்மையை மறுத்துள்ள வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க, இது குறித்து ஜனாதிபதி அல்லது அரசாங்க உறுப்பினர்கள் எவரும் இதற்கு முன்பு பேசியதில்லை என தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியதாவது:
"ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 102 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனுடன், திறைசேரிக்கு கடனாக 50 ரூபா எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவை அடிப்படையில், எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது."
அதுவே, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் திருத்தப்படுவதாகவும், இதற்கு முந்தைய விலை திருத்தமும் அதே முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
என்னவே எரிபொருள் விலை நிர்ணயத்தின் பின்னணியில் பல காரணிகள் அடங்கியுள்ளன. இதை புரிந்துகொள்ளாமல் மிதமான தகவல்களால் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மக்களின் நலனுக்கான முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் உறுதியளித்தார்