தமிழகத்தின் மலைக்கோட்டையான சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை உலகப் புகழ்பெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இது ஒரு புனித யாத்திரை. இலங்கையிலிருந்து பல கோயில்களிலிருந்து பக்தர்கள் குழுக்கள் சபரிமலைக்கு புறப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மட்டக்களப்பிலிருந்து ஒரு குழுவினர் புறப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரைக் குழுவினர் ஐயப்ப சுவாமியை தரிசிக்க இன்று(04) இந்தியா செல்ல புறப்பட்டனர்.
இதற்காக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றது. உறவுகளின் ஆசிர்வாதத்துடன் பாத பூசைகள் நடைபெற்று, இருமுடி சுமந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மனை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டனர். யாத்திரை குழுவினர் இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து ஜோதி பூஜை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.