முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
இன்று (17) காணி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவருக்கு சிஐடியில் இருந்து அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பின்பக்க வீதியால் திணைக்களத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பான விவரங்களை ஆராய்வதற்காக வாக்குமூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.