பிக்பாஸ் அருண் - அர்ச்சனா திருமணம் எப்போ தெரியுமா?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!

tubetamil
0

பிக்பாஸ் அருண்- அர்ச்சனா திருமணம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 



 பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அர்ச்சனாவும், எட்டாவது சீசனில் அருணும் கலந்துகொண்டார்கள். இவர்களில் அருண் எட்டாவது சீசனின் பாதியிலேயே எவிக்ட் ஆனாலும்; அர்ச்சனா 7ஆவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே சென்று டைட்டிலை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்பது குறித்து அருண் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை பிக்பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புகளும் பரவலாக கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி அருள்நிதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் அவர். அதேபோல் இன்னும் சில படங்கள் அவரது கைவசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. 


இது தொடர்பில்  அருண் சமீபத்தில் அளித்த குறித்த  பேட்டியில்  "எனக்கும் அர்ச்சனாவுக்கும் விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று எங்கள் இருவரது வீட்டிலும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடத்துக்குள் எங்களது திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்" என்றார். இதனால் அவர்களது திருமணம் விரைவில் நடப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top