யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் "இந்துவின் கரங்கள் 95" எனும் அமைப்பின் 50 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 50,000 பனை மரங்கள் நடுகை செய்வதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று (23) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் பிரிநிதிகளான திரு. ஸ்ரீஸ்கந்தபாலன் ராஜ்ராம் மற்றும் அழகரட்ணம் சுதர்ஷன் ஆகியோர் அந்த அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் சந்தித்தபோதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் இடஓழுங்குகள் செய்து தரப்படும் என பனை அபிவிருத்திச் சபையின் தலைவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.