சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் இன்றியமையாத பகுதியாகிவிட்டாலும், அதன் இருண்ட பக்கங்களை அடிக்கடி மறந்து விடுகிறோம். தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் இந்த தளங்கள், சில சமயங்களில் குடும்பங்களை சிதைத்து, மனித உறவுகளை சீரழிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் ஒன்றுதான் தம்புள்ளையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நடந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குடும்ப வறுமையை நிவர்த்தி செய்யும் நோக்கில், தம்புள்ளையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத்து சென்றுள்ளார். ஆனால், வெளிநாட்டில் பணிபுரியும் காலத்தில், அவர் டிக்டாக் என்ற சமூக வலைதளத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால், தனது குடும்பத்தை முற்றிலும் மறந்து, டிக்டாக் வீடியோக்களில் மட்டுமே மூழ்கிப்போனார்.
கணவர், மனைவியை மீண்டும் நாடு திரும்பும்படி அழைத்தும், அவர் கேட்கவில்லை. பின்னர், வேறு ஒரு நபருடன் தங்கியிருப்பது தெரியவந்ததும், கணவர் பொலிஸாரின் உதவியை நாடினார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தாலும், சில நாட்களிலேயே அவர் மீண்டும் தப்பிச் சென்றுவிட்டார்.