இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படுவது போன்று வெளியிடப்பட்ட ஓர் இணையவழி (Online) வேலை வாய்ப்பு திட்டம் மோசடியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
மோசடியில் வீட்டிலிருந்து பணியாற்ற ஸ்மார்ட்போன் அல்லது கணினி மட்டும் தேவை எனவும், நாளொன்றுக்கு 17,500 முதல் 46,000 ரூபாய் வரை சம்பளம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்காக வாட்ஸ்அப் மூலம் இணைவதற்கும், பதிவு செய்ய 2,000 ரூபாய் செலுத்தும் முறையும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பணத்தை செலுத்திய பின்பு, மோசடியாளர்கள் தொடர்பை துண்டிக்கின்றனர். இந்தப் போலியான வேலை வாய்ப்பு விளம்பரத்தில் சிக்கிய பலர் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கை மத்திய வங்கி இதுபோன்ற தந்திரங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் , பொது மக்களை மிகுந்த கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.