கொழும்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் 16 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் கூறியுள்ளார்.
மேலும் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது.
அத்துடன் சிறுமி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சிறுமி பல்கனியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதையும் பொறுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்