மாத்தளையில் சம்பவித்த விபத்தில் தம்பதி ஒன்று உயிரிழந்ததுடன், 3 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.பல்லேபொல, நாரங்கமுவ, மடவல உல்பத பகுதியில், குழு ஒன்றை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
மாத்தளை, உக்குவெல பகுதியை சேர்ந்த 75 வயதான முகமது இப்ராஹிம் ரிஷாப்தீன் மற்றும் 65 வயதான அவரது மனைவி ரஷீனா உம்மா ஆகியோரே உயிரிழந்தனர்.
மில்லவான பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குடும்பம் மீண்டும் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
பல்லேபொல, நாரங்கம பகுதியில் உள்ள பாறையிலிருந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.