கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான இந்த யுவதி, மத்துகம பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சமீபத்திய வனப்பகுதியில் மறைந்திருந்த போதே பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது
அத்துடன் கைதான பெண்ணின் கைத்தொலைபேசியினை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவை வழங்கியுள்ளது, இதன் மூலம் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது