கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி உட்பட மேலும் இருவர் கைது!

tubetamil
0

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இக்குற்றத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி ஆவர்.

கொலை குறித்து அறிந்திருந்தும், அது குறித்த தகவலை மறைத்து, குற்றத்திற்கு உதவியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


முன்னதாக, கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து வெளியான தகவல் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.


இதுவரை, இந்தக் குற்றத்துடன் தொடர்புடையதாக 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top