இலங்கையின் முக்கிய அனல் மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை மீண்டும் செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளது. இன்று (14) காலை முதல், அதன் முதலாவது அலகு தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சில நாட்களாக தடைப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன. இதன் முதலாவது அலகு தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், நாட்டின் மின்சாரம் வழங்கும் திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்