புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் கார், வென்னப்புவ பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மொஹமட் பைசல் பயணித்த கார் வென்னப்புவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இந்த மோதலில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டதாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.