சட்டவிரோத பண மோசடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கு பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான புதிய தகவல்களை கொண்டு, விசாரணை தற்போது பரவலாக நடைபெறுகிறது.
இதுகுறித்து 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற விசாரணையின்படி, யோஷிதவின் பணமோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர் மற்றும் டெய்சி ஃபோரஸ்ட் இணைந்து கூட்டு வைப்புத் தொகைகளில் பணம் பராமரித்ததாக தெரியவந்துள்ளது. இந்தச் செயல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி, பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.
குறித்த இதேவேளை யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபோரஸ்ட் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது மேலும் பல விசாரணைகள் நடைபெற உள்ளன. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.