மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உரிமை அமைச்சர் மட்டும்தான் வைத்திருக்கிறார் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துளார் .
நாடாளுமன்றத்தில் நடந்த பரபரப்பு விவாதத்தின் போது, ஜீவன் தொண்டமானின் கருத்துக்கு அவர் கடுமையாக பதிலடி கொடுத்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
புலமைச் சொத்து சட்டமூலத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது, தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை காப்பது தொடர்பாக ஜீவன் தொண்டமானம் கருத்து வெளியிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், "ஜீவனுக்கு இதைப் பேசும் அருகதை இல்லை; தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர்களின் மேல் உள்ளது," என்று கூறினார்.
மேலும், நாட்டின் சொத்துக்களை 76 வருடங்களாக சூறையாடியவர்களே தற்போது தேவையில்லாத பயங்களை உருவாக்க முயல்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தின் நடுவே ஏற்பட்ட இந்த சூழ்நிலையில், மோதல் வெடித்தது.
அமைச்சரின் கருத்து ஜீவனை கடுமையாக பாதித்தது. அவர் மறுப்பு தெரிவிக்க முற்பட்டபோதும், அமைச்சர், “மலையக மக்கள் எப்பொழுதே உங்களை கைகழுவிவிட்டார்கள்,” என்று கடுமையான பதிலை அளித்தார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் தற்போது அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. மலையக மக்களின் நலனை யார் காப்பாற்ற வேண்டும் என்ற விவாதம் தீவிரமாகியுள்ளது. எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது எதிர்பார்க்கப்படுகின்றது