லசந்த கொலை வழக்கு - மீண்டும் விசாரணைகளை தொடங்க அரசு தயார்..!

tubetamil
0

 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையைச் சுற்றியுள்ள நீதி கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்த வழக்கில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்றும், நீதி வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லையென்றும் உறுதிப்படுத்தினார்.



இது குறித்து அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 


லசந்தவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தையின் கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், அதற்கு நேரடியாக பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


மேலும், தேவையான நிலைமைகள் ஏற்பட்டால், இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், புதிய ஆதாரங்களைச் சேகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவும் அரசாங்கம் உறுதியாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.



அத்துடன் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அஹிம்சா விக்ரமதுங்க, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வரை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top