முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சில சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்நடவடிக்கையை இன்று (10) எடுத்து இருக்கின்றது.
2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சில சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹிருணிக்கா உட்பட பலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுடுவதுடன் , மேலும் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம்.