ஒரு சிறிய குரங்கின் செயலால் ஒரு முழு நாடே இருண்டுவிடும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்! ஆனால், இலங்கையில் நேற்றைய தினம் நடந்த இந்த அபூர்வமான சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. உலகம் முழுவதும் பத்திரிகைகளில் "குரங்கால் இலங்கையில் மின்தடை!" என்ற தலைப்புகள் அடிக்கடி தோன்றுகின்றன.
நேற்றைய தினம், இலங்கையின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தொடக்கத்தில் இது ஒரு சாதாரண தொழில்நுட்பக் கோளாறாகவே கருதப்பட்டது. ஆனால் பின்னர் வந்த தகவல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மின்தடைக்கு காரணமானது மனிதர்களோ, இயற்கை பேரழிவுகளோ அல்ல... ஒரு குரங்கு!
ஆனால் எப்படி ஒரு குரங்கு ஒரு முழு நாட்டையே இருளில் மூழ்க செய்ய முடியும்?
இது குறித்த தகவலின்படி, அந்த குரங்கு மின்விநியோக நிலையத்துக்குள் நுழைந்து முக்கிய வயர்களில் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக ஒரு முக்கிய மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, நாடு முழுவதும் மின்தடையைக் ஏற்படுத்தியது.
இந்த விஷயம் வெளியானவுடன், உலகின் முக்கிய ஊடகங்கள் இதைப் பெரிதாக செய்தியாக வெளியிட்டன. ஏ.பி.பீ நியூஸ், டிம்சும்டெய்லி (ஹொங்கொங்), தி பிரசல்ஸ் டைம்ஸ், நியூஸ் 18, தி பெனிசுலா (கட்டார்), சீ.என்.பி.சி, ஜீயோ இங்கிலிஷ், தி பிஸ்னஸ் ஸ்டார்டர்ட், வெக்கார்ட் நியூஸ்பேப்பர், பெஸ்ட்போஸ்ட், வியோன், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், "குரங்கால் இலங்கை முழுவதும் மின்தடை!" என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டன.
தொடர்ச்சியாக மின்தடை பிரச்சினைகளை சந்தித்து வரும் இலங்கை, தற்போது ஒரு வித்தியாசமான சிக்கலுக்கலில் மாற்றியுள்ளது. அரசியல், பொருளாதாரம், மற்றும் பிற காரணங்களால் மின்விநியோகம் பாதிக்கப்படுவது புதிதல்ல. ஆனால், ஒரு குரங்கால் நாடு முழுவதும் மின்தடை ஏற்படுவது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும்!
இலங்கை அரசாங்கம் இந்த விஷயத்தை எவ்வாறு கையாளும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. "ஒரு சிறிய குரங்கை மீறி கூட மின்விநியோகத்தை பாதுகாக்க முடியாதா?" என்ற கேள்வியும் இப்போது பலரது உள்ளங்களை தொட்டுள்ளது!