கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில் இன்று (14) முதல் மொரட்டுவை ரயில் நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மொரட்டுவை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும் காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில், கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களில் நின்று கோட்டை ரயில் நிலையத்தை அடையும். பின்னர், இரவு 8.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தனது வழக்கமான பயணத்தைத் தொடரும்.
இந்த மாற்றம் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.